மாதுளை ரைத்தா

என்னென்ன தேவை?

மாதுளை – 1 கப்
தயிர் – 2 கப்
உப்பு – சிறிது
சர்க்கரை – 1 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
கருப்பு உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
சீரகம் தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – 4 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

ஒரு கிண்ணத்தில் தயிர் எடுத்து நன்றாக கலந்து அதனுடன் உப்பு, சர்க்கரை, சாட் மசாலா தூள், மிளகாய் தூள், கருப்பு உப்பு, சீரகம் தூள் சேர்த்து கலக்கி அதில் மாதுளை சேர்த்து வெட்டி வைத்த கொத்தமல்லி இலை தூவி கலந்து பரிமாறவும்.

Leave a Reply