உடல் எடையை குறைக்கும் கொள்ளு குழம்பு

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்ளலாம். இன்று கொள்ளு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்கும் கொள்ளு குழம்பு
தேவையான பொருட்கள் :

கொள்ளு – 200 கிராம்,
பெரிய வெங்காயம் – 200 கிராம்,
தக்காளி – 200 கிராம்,
பச்சைமிளகாய் – 5,
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 10 பல்
கடுகு – அரை ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம்,
காய்ந்தமிளகாய் – 5,
மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் – 1 டீஸ்பூன்,
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்,
புளி – 50 கிராம்,
நல்லெண்ணெய் – 200 மி.லி.,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிது,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். பொடியாக நறுக்க வேண்டாம்.

* கொள்ளுவை நன்கு சுத்தம் செய்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து, குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

* கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்த பின் சின்ன வெங்காயம், நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாதூளை சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

* குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் வெந்த கொள்ளு, தேவையான அளவு உப்பு போட்டு குழம்பு திக்கான பதம் வரும் வரை அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

* கடைசியாக குழம்பை இறக்கும் போது கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும்.

* சுவையான கொள்ளு குழம்பு ரெடி.

Leave a Reply