ஆளி விதை இட்லிப் பொடி

என்னென்ன தேவை?

ஆளி விதை – 1 கப் (Flax seeds),
எள் – 1/2 கப்,
உளுத்தம்பருப்பு – 1/2 கப்,
கடலைப்பருப்பு – 1/2 கப்,
காய்ந்த மிளகாய் – 20,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,
உப்பு-தேவைக்கு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விடாமல் ஆளி விதை மற்றும் எள்ளை தனித்தனியாக படபடவென்று பொரியும் படி வறுத்ெதடுத்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் விட்டு மற்ற அனைத்தையும் தனித்தனியாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். அனைத்துப் பொருட்களும் ஆறியவுடன் தேவையான உப்பு சேர்த்து கரகரவென்று பொடித்து வைத்துக் கொள்ளவும்.

Leave a Reply