சூடான சுவையான சில்லி கார்லிக் சிக்கன் விங்ஸ்!

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ… வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ‘சில்லி கார்லிக் சிக்கன் விங்ஸ்’ அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.

தேவையானவை:

சிக்கன் விங்ஸ் – 8
பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் விழுது – ஒன்றரை டீஸ்பூன் (விதை நீக்கிய வரமிளகாயை சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்)
சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்
வினிகர் – ஒரு டீஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்
முட்டை – 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் விங்ஸை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி லேசாக அடித்துக் கொண்டு, அதனுடன் பூண்டு விழுது, காய்ந்த மிளகாய் விழுது, சோயா சாஸ், வினிகர், சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இதனுடன் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அதில் சிக்கன் விங்ஸை சேர்த்து பொரித்து எடுக்கவும் ஸ்நாக்ஸாக சாப்பிட ஏற்ற சில்லி கார்லிக் சிக்கன் விங்ஸை சூடாக சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். சூடு குறைந்தால் சுவையும் குறைவாகவே இருக்கும்.

Leave a Reply