உருளைக்கிழங்கு குருமா

என்னென்ன தேவை?

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
பட்டை – 2
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 2
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
சீரகத் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி
பச்சை பட்டாணி – 1 கப்
உருளைக்கிழங்கு – 2
கொத்தமல்லி இலை – சிறிது
உப்பு – தேவைக்கு
தண்ணீர் – தேவையான அளவு

அரைக்க…

தேங்காய் – 1 கப்
கசகசா – 1 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

மிக்சி ஜாரில் தேங்காய் மற்றும் கசகசா எடுத்து நன்றாக மசித்து வைக்கவும். பின்னர் தக்காளி எடுத்து ஜாரில் போட்டு மசித்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பெருஞ்சீரகம், பட்டை, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கி சிறிது உப்பு தூவி பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதுடன் அரைத்து வைத்த தக்காளி சாறு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.

பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அவற்றுடன் அரைத்து வைத்த தேங்காய் மசாலாவை ஊற்றி, பின் உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி சேர்த்து கிளறவும். இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் உருளைக்கிழங்கு குருமா ரெடி!!!

Leave a Reply