தக்காளி பாயாசம் செய்வது எப்படி?

என்னென்ன தேவை?

பழுத்த தக்காளி – 5

துருவிய வெல்லம் – கால் கப்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

தேங்காய்ப் பல் – ஒரு டேபிள்ஸ்பூன்

முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்

ஏலப்பொடி- அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

தக்காளியைப் பொடியாக நறுக்கி, அடிகனமான பாத்திரத்தில் போட்டு அரை டம்ளர் நீர் விட்டு வேகவையுங்கள். தக்காளி வெந்ததும் துருவிய வெல்லத்தை நைஸாகப் பொடித்துச் சேருங்கள். ஒரு கொதி வந்ததும் தேங்காய்த் துருவலை நைஸாக அரைத்துச் சேருங்கள். அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் நெய்யில் தேங்காய்த் துண்டுகள், முந்திரியை வறுத்துச் சேருங்கள். ஏலப்பொடி சேர்த்து இறக்கிவையுங்கள்.

Leave a Reply