உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி

என்னென்ன தேவை?

பெரிய உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து உரித்து மசித்தது),
பாலக்கீரை – 1 கப் (வேகவைத்து அரைத்தது),
கோதுமை மாவு – 3 கப்,
துருவிய சீஸ் – 1/4 கப்,
உப்பு – தேவைக்கு,
தயிர் – 3 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன்,
நறுக்கிய பச்சைமிளகாய் – 1,
கொத்தமல்லித்தழை – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கோதுமை மாவு, பாலக்கீரை விழுது, உப்பு, மஞ்சள் தூள், சீரகத் தூள், தயிர், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் அனைத்தும் சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து வைக்கவும். பிசைந்த மாவை 10-12 சரிசம அளவு உருண்டைகளாக பிரித்து, வட்டமான சப்பாத்திகளாக இட்டு வைக்கவும். வேகவைத்த உருளைக்கிழங்குடன், உப்பு, பச்சைமிளகாய், மல்லித்தழை, துருவிய சீஸ் ஒன்றாக சேர்த்து கலந்து, பரத்திய சப்பாத்தியின் மேல் 1 1/2 டேபிள்ஸ்பூன் அளவு கலவையை நடுவில் வைக்கவும்.

சப்பாத்தியின் ஓரங்களை நடுபாகத்துக்கு ஒன்று சேர்த்து உருளைக்கிழங்கு கலவை மூடும் அளவிற்கு கொண்டு வந்து, மேலேயுள்ள மீதி சப்பாத்தி மாவை கிள்ளி எடுக்கவும். உருண்டையாக உருட்டி கோதுமை மாவு தூவி வட்டமாக சப்பாத்திகளாக, உருளைக்கிழங்கு கலவை வெளியே வராத அளவுக்கு பரத்தி எடுக்கவும். சப்பாத்தி கல்லை சூடாக்கி சிறிதளவு எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வெந்தவுடன் சூடாக தயிர், ஊறுகாய் அல்லது காய்கறி குழம்புடன் பரிமாறவும்.

Leave a Reply