வித்தியாசமான பலாப்பழ ரெசிபி

கோடையில் பலாப்பழம் அதிகம் கிடைக்கும். இந்த பலாப்பழம் பலருக்கு மிகவும் விருப்பமான பழமாக இருக்கும். இந்த பலாப்பழத்தை வித்தியாசமான முறையில் சாப்பிட ஆசைப்பட்டால், இதனை சர்க்கரைப்பாகில் ஊற வைத்து சாப்பிடுங்கள். இதனால் அதன் சுவை அதிகரித்திருப்பதுடன், ஜெல்லி போன்றும் இருக்கும். சரி, இப்போது அந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்: பலாப்பழம் – 4-5 பௌல் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்) தண்ணீர் – 1 பௌல் சர்க்கரை – 2-3 கப்

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அத்துடன் சர்க்கரை சேர்த்து, நன்கு கெட்டியாக பாகு போன்று வரும் போது அதனை இறக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் பலாப்பழ துண்டுகளை சேர்த்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, 15 நாட்கள் நன்கு ஊற வைக்க வேண்டும். 15 நாட்கள் ஆன பின்னர், அதில் உள்ள அதிகப்படியான பாகுவை வடிகட்டிவிட்டு, பின் அதனை ஜாம் போன்று பயன்படுத்தலாம். அதிலும் பிரட்டுடன் இதனை சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். மேலும் ஐஸ் க்ரீம் மேல் டாப்பிங்ஸ் போன்றும் பயன்படுத்தலாம்.

Leave a Reply