சத்தான வாழைப்பழ தயிர் சாலட்

சிலருக்கு வாழைப்பழம் சாப்பிட பிடிக்காது. அவர்கள் வாழைப்பழம் தயிர் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம். இப்போது அந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான வாழைப்பழ தயிர் சாலட்
தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் – 2
புளிக்காத தயிர் – 5 மேசைக்கரண்டி
தேன் – 3 மேசைக்கரண்டி
தேங்காய்ப் பூ – 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாழைப்பழத்தை தோலை நீக்கி விட்டு வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பழம, தேன், தயிர், தேங்காய் பூ, ஏலக்காய் தூள் போட்டு நன்றாக கலக்கவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை போட்டு பரிமாறவும்.

குறிப்பு :

* தயிர் கெட்டியாக இருந்தால் நன்றாக இருக்கும்.

Leave a Reply