வேப்பம்பூ வடகம்

 

  • காய வைத்த வேப்பம்பூ – 3 கப்
  • உளுந்து – 1 கப்
  • மிளகு – 1 தேக்கரண்டி
  • பெரிய சீரகம் – 1 மேசைக்கரண்டி
  • சிறிய சீரகம் – 1 மேசைக்கரண்டி
  • வெட்டிய வெங்காயம் – 1/2 கப்
  • கறிவேப்பிலை – 2 – 3 நெட்டு
  • மிளகாய் பிளேக்ஸ் – 2 மேசைக்கரண்டி
  • உப்பு

 

  • மிளகு, பெரிய, சிறிய சீரகங்களை பொடித்து கொள்ளவும்
  • உழுந்தை 5- 6 மணித்தியாலங்கள் ஊற வைத்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் அரைத்த உளுந்தினுள் காய்ந்த வேப்பம் பூ மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விடாது இறுக்கமாக குழைக்கவும்.
  • பின்னர் அதனை நெல்லிக்காயளவு உருண்டைகளாக உருட்டி சிறிது வடை போல தட்டையாக்கி சுத்தமான காய்ந்த ஒரு துணியில் (பொதுவாக தாத்தாவின் பழைய வேட்டி) அடுக்கி வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்.
  • வேப்பம்பூ வடகம் தயார். இதனை ஒரு சுத்தமான் காய்ந்த போத்தல் அல்லது டப்பாவினுள் போட்டு தேவையான போது எடுத்து எண்ணெயில் பொரித்து சோறு புட்டு போன்றவற்றுடன் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு:

இதற்கு வெங்காயத்தை நல்ல குறுணலாக வெட்ட வேண்டும். ஒரு வருடத்துக்கு மேல் வைத்து பாவிக்கலாம். பழுதாகாது. சுவையானது. வேப்பம் பூ ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதே முறையில் பாவற்காய், முருங்கைக்காய், வாழைப்பூ கொண்டும் வடகம் செய்யலாம்

Leave a Reply