தலப்பாக்கட்டு பிரியாணி:

தேவையான பொருட்கள்:
சிக்கன் – ½ கிலோ
பிரியாணி அரிசி – ½ கிலோ
வெங்காயம் – 5
தக்காளி – 4
பச்சை மிளகாய் – 7
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
ஏலக்காய், இலவங்கம் – 6
பட்டை – 2
முந்திரி – 6
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பூண்டு – 10 பல்
தயிர் – சிறிய கப்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
கெட்டியான தேங்காய் பால் – அரை கப்
எலுமிச்சை – 1
எண்ணெய் – 100 கிராம்
நெய் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள்
உப்பு சுவைகேற்ப‌
செய்முறை:
பிரியாணி அரிசி வேக வைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சை மிளகாய் அரிந்து கொண்டு, இஞ்சி,பூண்டினை துருவி கொள்ளவும்.
கெட்டியான‌ தேங்காய் பால் 2 கப் எடுத்து தயாராக வைத்து கொள்ளவும்.
2 தேக்கரண்டி நெய்யில், முந்திரியை பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணய் சேர்த்து ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை சேர்த்து வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
இப்பொழுது ந்றுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இதில் பாதி வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும் (இறுதியாக பயன்படுத்த)
இப்பொழுது, இஞ்சி, போண்டை சேர்த்து நன்கு வதக்கவும், தயிர், தக்காளி, உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்க்க‌வும்.
கரம் மசாலாதூள், சிவப்பு மிளகாய் தூள், கோழி துண்டுகள் இவற்றை சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வறுக்கவும்.
தேங்காய் பால் சேர்த்து கோழி வேகும் வரை மூடி வைத்து சமைக்கவும்.
குழம்பு கெட்டியானவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் சேர்க்கவும்.
வேக வைத்த சாதத்துடன்,  இந்த கோழி கறி மசாலா சேர்த்து பார்த்து பதமாக கிளறி விடவும்.
கடைசியாக வறுத்த முந்திரி, வறுத்த வெங்காயம் சேர்த்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

Leave a Reply