முருங்கைக்காய் அவியல் செய்வது எப்படி

முருங்கைக்காய் அவியல் செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது முருங்கைக்காய் அவியல் செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

முருங்கைக்காய் அவியல் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் – 5
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு.

தேங்காய் – அரை கப்
வரமிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிது
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு.

தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :

* முருங்கைக்காயை சமமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியில் முருங்கைக்காய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

* அரைத்த மசாலாவை வாணலியில் உள்ள முருங்கைக்காயுடன் சேர்த்து கிளறி, மிதமான தீயில் 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.

* மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, முருங்கைக்காயுடன் சேர்த்து கிளறி இறக்கினால், முருங்கைக்காய் அவியல் ரெடி!!!

Leave a Reply