கேரட் தால்

என்னென்ன தேவை?

பாசிப் பருப்பு – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
கேரட் – 2
பச்சை மிளகாய் – 2
உப்பு – சிறிதளவு
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் பாசிப் பருப்பு, வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், தக்காளி எடுத்து தண்ணீர் ஊற்றி பருப்பு வேகும் வரை சமைக்கவும். பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். மற்றொறு கடாய் எடுத்து நெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தாலில் ஊற்றி பரிமாறவும்.

Leave a Reply