சத்தான டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி

குழந்தைகளுக்கு அடிக்கடி டிரை ஃப்ரூட்ஸ் கொடுப்பது உடலுக்கு நல்லது. உடலுக்கு உகந்த சத்தான டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.

சத்தான டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
தேவையான பொருட்கள் :

தயிர் – 2 கப்
பாதாம் – 10
முந்திரி – 10
பிஸ்தா – 10
கிஸ்மிஸ் -20
குங்குமப் பூ – சிறிது
பேரீட்சை பழம் – 3
தேன் – தேவையான அளவு
ஏலக்காய்ப்பொடி – 1 சிட்டிகை
ஐஸ் கியூப்ஸ் – சிறிது

செய்முறை :

* பாதாம், முந்திரி, பிஸ்தா, கிஸ்மிஸ், பேரீட்சை பழம் முதலியவற்றை தண்ணீரில் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

* மிக்சி ப்ளண்டரில் தயிர், அரைத்த டிரை ஃப்ரூட்ஸ் விழுது, தேன், ஏலக்காய்ப் பொடி, ஐஸ்கட்டி போட்டு ஒரு அடி அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே குங்குமப் பூவைப் போட்டு பரிமாறவும்.

* சூப்பரான டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி ரெடி.

* மிகவும் சத்தானது இந்த டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி.

Leave a Reply