சுவையான சத்தான பாலக் சப்பாத்தி

பாலக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. பாலக்கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது பாலக் சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான பாலக் சப்பாத்தி
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்,
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – அரை டீஸ்பூன்,
எண்ணெய், நெய் கலவை – தேவையான அளவு.

அரைக்க:

பசலைக்கீரை (பாலக்) – ஒரு கட்டு,
பச்சை மிளகாய் – 3,
இஞ்சி – ஒரு துண்டு,
உப்பு – சிறிதளவு.

செய்முறை:

* பசலைக்கீரையை சுத்தம் செய்து கழுவி, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள்.

* விசிலைத் தூக்கி பிரஷரை வெளியேற்றிவிட்டு, குக்கரைத் திறந்து ஆறியதும், அவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, நெய், அரைத்த பசலைக்கீரை சேர்த்துப் சப்பாத்திமாவு பதத்தில் பிசைந்து அரை அணி நேரம் ஊற வைக்கவும்.

* மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்த சப்பாத்திகளை போட்டு சுற்றி சிறிது நெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சுவையான சத்தான பாலக் சப்பாத்தி ரெடி.

Leave a Reply