கரம் மசாலாத்தூள் என்பது எதற்கெல்லாம் உபயோகப்படுத்துவார்கள்?

கரம் மசாலாத்தூள் என்பது எதற்கெல்லாம் உபயோகப்படுத்துவார்கள்? எப்படி அதைவீட்டிலேயே செய்ய வேண்டும் என்பதை குறித்து கொள்ளுங்கள்.

கரம் மசாலாத்தூள் செய்ய
தேவையானவை:
மல்லி (தனியா) – கால் கப்
ஏலக்காய் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
கிராம்பு – 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு – 1 டேபிள்ஸ்பூன்
அன்னாசிப்பூ – 4
பட்டை – 4 குச்சி (ஒரு இஞ்ச் நீளம்)
ஜாதிக்காய் – ஒன்றில் கால் பாகம்
பிரிஞ்சி இலை – 2
செய்முறை:
தேவையானவற்றில் கொடுத்துள்ள அனைத்தையும் வெறூம் வாணலியில் ஒன்றாக சேர்த்து மிதமான தீயில் தொடர்ந்து வறுக்கவும். எல்லாம் ஒன்றாக நன்று வறுப்பட்டதும், ஆறவைத்து பிறகு மிக்ஸியில் அரைத்து பவுடராக்கவும். அரைத்ததை சலித்து ஒரு டப்பாவில் அடைத்து கொண்டால் கரம் மசாலாத்தூள் ரெடி.
இதை டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டால் வெஜ், நான் – வெஜ் என எல்லாவற்றிலும் உபயோகித்து கொள்ளலாம்.

Leave a Reply