கேரளா ஸ்பெஷல் அவியல் செய்வது எப்படி

கேரளாவில் விசேஷ நாட்களில் கண்டிப்பாக இந்த அவியலை செய்வார்கள். சூப்பரான இந்த அவியலை இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கேரளா ஸ்பெஷல் அவியல் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய், கேரட், வாழைக்காய் – தலா ஒன்று, பீன்ஸ் – 5,
சேனைக்கிழங்கு – 100 கிராம்,
பச்சை மிளகாய் – 5,
சீரகம் – இரண்டு டீஸ்பூன்,
தேங்காய் – அரை மூடி (துருவிக் கொள்ளவும்),
தயிர் – ஒரு கப்,
பூண்டு – 3 பல்,
கடுகு அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு,
தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* முதலில் காய்கறிகளைக் கழுவி, ஒன்று போல் நறுக்கி, பாத்திரத்தில் போட்டு, அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* தேங்காய் துருவலுடன், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* பிறகு வெந்த காய்கறிகளையும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, தயிர் சேர்த்துக் கிளறவும்.

* இப்போது சூப்பரான அவியல் ரெடி.

* இதனை ஆப்பம், தோசை, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

Leave a Reply