கோதுமை ரவை சாலட்

கோதுமை ரவை சாலட் தேவையான பொருட்கள்

கோதுமை ரவை                    – 1/2 கப்
வெள்ளரிக்காய்                      – 1
தக்காளி                                     – 2
ப்ரக்கோலி                               – 1
மஷ்ரூம்                                   – 10
லெட்டூஸ்                               – 4 இலை
எண்ணெய்                             – 1/2 டீஸ்பூன்
ட்ரஸ்ஸிங்கிற்கு

நறுக்கிய புதினா இலை     – 1/4 கப்

எலுமிச்சம்பழ ஜுஸ்           – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள்               – தேவையான அளவு

கோதுமை ரவை சாலட் செய்முறை

ட்ரஸ்ஸிங்கிற்கு கொடுத்துள்ள பொருட்களையெல்லாம் ஒன்றாகக் கலந்து மிக்ஸ் செய்து கொள்ளவும். கோதுமை ரவையை கொதிக்கும் தண்ணீரில் சிறிது எண்ணெய், உப்பு சேர்த்து 6 முதல் 7 நிமிடம் வரை வேக விடவும். வெந்தவுடன் வடிகட்டி, குளிர்ந்த நீரில் போட்டு திரும்பவும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வெள்ளரிக்காய், தக்காளி, ப்ரக்கோலி, மஷ்ரூம், லெட்டூஸ் முதலியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மஷ்ரூமை வேக வைத்துக் கொள்ளவும். ஒரு சாலட் பவுலில் வேக வைத்த கோதுமை ரவை, நறுக்கிய காய்கறிகள், செய்து வைத்துள்ள ட்ரஸ்ஸிங் முதலியவற்றை சேர்த்துக் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்

Leave a Reply