சுவையான சத்தான வல்லாரைக் கீரை சாலட்

வல்லாரைக்கீரை உடலுக்கும் மிகவும் நல்லது. இந்த வல்லாரைக்கீரையை வைத்து சுவையான சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான வல்லாரைக் கீரை சாலட்
தேவையான பொருட்கள் :

வல்லாரைக் கீரை – 100 கிராம்,
சின்ன வெங்காயம் – 50 கிராம்,
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

செய்முறை :

* வல்லாரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வல்லாரைக்கீரை, தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், போட்டு நன்றாக கலக்கவும்.

* அடுத்து தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துப் பிசிறி பத்து நிமிடம் கழித்து சாப்பிடவும். அருமையாக இருக்கும்.

* சுவையான சத்தான வல்லாரைக் கீரை சாலட் ரெடி.

* மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் இந்த சாலட்.

Leave a Reply