கிராமிய மணத்துடன் கலக்கல் கமர்கட்டு

உங்களின் சிறு வயதில் கமர்கட்டு சாப்பிட்ட நினைவிருக்கும். இங்கே கிராமிய மணத்துடன் கலக்கல் கமர்கட்டு செய்து எப்படி என்று பார்க்கலாம்.

கிராமிய மணத்துடன் கலக்கல் கமர்கட்டு
தேவையான பொருட்கள் :

துருவிய தேங்காய் – ஒரு கப்,
வெல்லம் – முக்கால் கப்,
நல்லெண்ணெய் – அரை டீஸ்பூன்

செய்முறை :

* துருவிய தேங்காயை மிக்ஸியில் சேர்த்து நீர் விடாமல் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

* வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரையவிட்டு, அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து நுரைத்து வரும் வரை கொதிக்க விடவும்.

* நுரைத்து வந்ததும் அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு சுருள வதக்கி நல்லெண்ணெய் சேர்க்கவும்.

* கலவை நன்கு முற்றிய நிலையில் வரும் போது இறக்கி, ஆறி இறுகுவதற்குள் வேகமாக சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். கை சூடு பொறுக்கவில்லை என்றால், முதலில் கைக்கு வருவது போல் உருட்டிப் போட்டு விட்டு, பிறகு நன்கு அழுத்தி உருண்டை வடிவமாக உருட்டிப் போடவும்.

* கிராமிய மணத்துடன் கலக்கல் கமர்கட்டு ரெடி!

Leave a Reply