மட்டன் சாப்ஸ்

மட்டன் சாப்ஸ் தேவையான பொருட்கள்

சாப்ஸ் மட்டன் எலும்புடன்         – 250 கிராம்
மஞ்சள் பொடி                                      – 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்                           – 10
முந்திரிப் பருப்பு                                 – 15
உப்பு, எண்ணெய்                               – தேவையான அளவு
நெய்                                                          – 2 டீஸ்பூன்

அரைக்க

சிவப்பு மிளகாய்                    – 6
தனியா                                        – 2 டீஸ்பூன்
சீரகம்                                           – 2 டீஸ்பூன்
தேங்காய் துருவியது         – 1/2 கப்
சோம்பு                                        – 1 டீஸ்பூன்
இஞ்சி                                           – 1 இன்ச்
பூண்டு                                          – 4 பல்
பட்டை                                         – 1 இன்ச்
கிராம்பு                                         – 2
ஏலக்காய்                                    – 2

மட்டன் சாப்ஸ் செய்முறை

சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருள்களையெல்லாம் நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் சாப்ஸ் மட்டனைப் போட்டு, உப்பு, மஞ்சள் பொடி, அரைத்த மசாலா போட்டு வேக விட வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சூடாக்கி முந்திரிப் பருப்பு போட்டு வறுத்து, பின் சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி பின் வேக வைத்து வைத்துள்ள மட்டன் சாப்ஸை குழம்போடு ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பு வற்றி எண்ணெய் பிரிந்து வெளியே வரும் போது இறக்கவும்.

Leave a Reply