தேங்காய் பருப்பு ரசம்

தேவையான பொருட்கள்:

 • தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
 • துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் – 2கப்
 • நாட்டு தக்காளி – 1
 • புளி – சிறிதளவு
 • பூண்டு – 1
 • கடுகு, மிளகு சீரகம் – 1ஸ்பூன்
 • கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
 • பெருங்காயத் தூள் – சிறிதளவு
 • காய்ந்த மிளகாய் – 3
 • மஞ்சள் தூள் – 1/4ஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு
 • எண்ணெய் – தாளிக்க

செய்முறை:

மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், கறிவேப்பிலை, 1காய்ந்த மிளகாய், மிளகு சீரகம், புளி, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பூண்டு, தக்காளி ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்….

வாணலியில் பருப்பு தண்ணீர் ஊற்றி அதில் அரைத்த விழுது, கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மூடி விடவும். 1கொதி வந்ததும் அடுப்பை அனைத்து வேற பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் சீரகம், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து ரசத்தில் கொட்டவும்.

சுவையான தேங்காய் பருப்பு ரசம் தயார்.

Leave a Reply