ஹங்ஓவர் நூடுல்ஸ்

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், மிக எளிதாக, மிக சுவையாக இருக்கும் உணவு இது, நல்ல பசியில் இருக்கும் போது இதை வயிறு முட்ட சாப்பிடலாம். இந்த நூடுல்ஸின் அலங்காரம் மிகவும் அற்புதமாகவும், அழகாகவும் உள்ளது, இதன் மேல் ஒரு வறுத்த முட்டை பரவலாக சேர்ப்பது மிக கச்சிதமாக‌ உள்ளது. மிளகாய் சாஸை இதன் மீது நிறைய தெளித்து விடுவதால், அதை அப்படியே நீங்கள் முகத்தை சுற்றி ஒரு அறை கொடுக்கும் அளவுக்கு செய்து கொள்ளலாம்.

ஒரு பெரிய கிண்ணத்தில் தோலுரித்த‌ இஞ்சி மற்றும் பூண்டை துருவி வைத்துக் கொள்ளவும். சோயா சாஸ், வினிகர், எள் எண்ணெய் மற்றும் மிளகு ஒரு சிட்டிகை சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டு இதை அலங்கரிக்க பயன்படுத்தவும். வெட்டி துருவிய‌ முட்டைக்கோஸ் மற்றும் ப்ரோக்கோலி (பச்சை பூக்கோசு: தண்டை நீக்கி புதியதாக வெட்டிக் கொள்ள‌வும்) இவற்றை தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். ஒரு பெரிய பாத்திரத்தில் நூடுல்ஸை சுமார் 3 நிமிடங்கள் வேகவைத்து, பின்னர் இறுதியில் ஒரு நிமிடம் இருக்கும் போது அவரைக்காய் சேர்க்கவும். பிறகு இதை நன்கு வடிகட்டி கலந்து கொண்டு, இதன் மீது அலங்கரிக்கவும்.

இதற்கிடையில், ஒரு சின்ன கடாயில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, மித‌மான தீயில் முட்டைகளை வறுக்கவும் (நான் மஞ்சள் கரு நன்கு கலந்து வரும் வரை வறுத்துள்ளேன்). சிறிய கிண்ணங்களில் நூடுல்ஸ் எடுத்துக் கொண்டு, ஒவ்வொன்றின் மீதும் வறுத்த முட்டையை வைத்து மிளகாய் சாஸ் தெளித்து பரிமாறவும்.

ஜேமியின் சூப்பர் குறிப்புகள் – படத்தில் காட்டியிருக்கும் பக்வீட் நூடுல்ஸ் (கொஞ்சம் செலவு அதிகமானதுதான்) பயன்படுத்தி இருந்தால் இன்னும் ஒரு பெரிய சுவையாகவும் மணமாகவும் இருந்திருக்கும். நீங்கள் சமைக்கும் முன் பாக்கெட்டில் போட்டிருக்கும் வழிமுறைகளை சரிபார்த்துக் கொண்டு சமைக்கவும். ஏனெனில் சரியான சமைக்கும் நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் இருக்க. நீங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும் காய்கறி கலவை அல்லது வேறு எதாவது புதிய காய்கறிகள் இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

Leave a Reply