கீரைத்தண்டு சூப்

தேவையான பொருட்கள் :

தண்டங்கீரை – 1 கட்டு
தக்காளி – 1
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி – தேவையான அளவு
வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – 1 ஸ்பூன்

செய்முறை :

• கீரையை சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தண்டுகளை தனியாக பொடியாக நறுக்கவும்.

• பின்னர் வாணலியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் கீரை, நறுக்கிய தண்டுகளையும் போட்டு வேக வைக்கவும்.

•  வெங்காயம், தக்காளி, பொடியாக நறுக்கி வேகும் கீரையில் சேர்க்க வேண்டும்.

• பின்னர் மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை, உப்பு சேர்க்கவும்.

• நன்றாக கொதித்து மணம் வீசும். அப்போது அடுப்பில் இருந்து இறக்கி மிளகு தூள் சேர்த்து பருகவும்.

• சுவையான சூப்பரான கீரைத்தண்டு சூப் ரெடி

• இது உடலுக்கு தெம்பு தரக்கூடியது. வாரத்துக்கும் ஒரு முறையாவது இது செய்து குடிப்பது நல்லது.

Leave a Reply