காரசாரமான கடலை பருப்பு மசாலா

தயாரிப்பு நேரம் மற்றும் ஊற வைக்கும் நேரம் சேர்த்து + 10 நிமிடங்கள் 

சமையல் செய்ய தேவையான நேரம்: 15 நிமிடங்கள்
4 பேர் சாப்பிடும் அளவு

தேவையான பொருட்கள்:
2 கப் கடலை
2 டீஸ்பூன் எண்ணெய்
1 பிரின்ஜி இலை
1 கருப்பு ஏலக்காய்
1 தேக்கரண்டி சீரகம்
2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
1 தேக்கரண்டி மிளகாய் பொடி
1 தேக்கரண்டி கரம் மசாலா
1 டீஸ்பூன் உலர் மாங்காய் பொடி
½ தேக்கரண்டி ஓமம்
கொத்தமல்லி தழை மற்றும் பச்சை மிளகாய் இறுதியாக அலங்கரிக்க‌
உப்பு சுவைக்கேற்ப‌

செய்முறை:
கடலை பருப்பை ஒரு இரவு முழுவதும் அல்லது குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஊற வைக்கவும். கடலை பருப்புடன், பிரின்ஜி இலை, கருப்பு ஏலக்காய், 1 டீஸ்பூன் உப்பு, 3 கப் தண்ணீர் சேர்த்து கடலை நன்கு வேகும் வரை வேக வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய்யை சூடாக்கவும். இதனுடன் சீரகம் சேர்த்து பொரியும் போது மற்ற அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வறுக்கவும்,(விஜய்தமிழ் ஸ்பெஷல்) தேவைப்பட்டால் சிறிது கடலை வேக வைத்த தண்ணீரை, மசாலா தீயாமல் இருக்க சேர்க்கலாம்.
இப்போது வேக வைத்த கடலை ப்ருப்பையும், மீதமுள்ள வேகவைத்த தண்ணீரையும் சேர்த்து நன்கு கிளறவும். தண்ணீர் முழுவதும் நன்றாக சுண்டும் வரை வேக விடவும்.
சூடாக‌ கொத்தமல்லி இலைகள் மற்றும் பச்சை மிளகாய் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

Leave a Reply