பன்னீர் வறுவல்

 என்னென்ன தேவை?
பன்னீர் – 250 கிராம்
மிளகாய் வற்றல் – 6
எண்ணெய் – தேவைக்கு
சோம்பு – 1ஸ்பூன்
சீரகம் – 1ஸ்பூன்
கசகசா –  1ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1/2 ஸ்பூன்
 எப்படிச் செய்வது?

மிளகாய் வற்றல், சீரகம், சோம்பு, கசகசா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் பன்னீர் துண்டுகளாக போட்டு பொன்னிறமாக பொறித்துஎடுத்துக்கவும்
வாணலியிலுள்ள எண்ணெயில் கடுகையும் கறிவேப்பிலையையும் போட்டுத் தாளித்து மீண்டும் பன்னீர் துண்டுகளைப் போடுங்கள்.
அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதையும் போட்டுத் தொடர்ந்து கிளறிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
பன்னீர் நன்கு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

Leave a Reply