முருங்கை இலை சாறு

தேவையான பொருட்கள்…

முருங்கை இலை – 100 கிராம்
மிளகு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 4
பூண்டு – 10
உளுந்து – ஒரு தேக்கரண்டி
தக்காளி- 2
வெங்காயம் – 1
கொத்தமல்லி, புதினா – 1 கைப்பிடி
எண்ணெய், உப்பு, மஞ்சள் – தேவையான அளவு

செய்முறை……

• முருங்கை இலையைச் சுத்தம் செய்து, சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

• கொத்தமல்லி, புதினா, தக்காளி,வெங்காயத்தை பொடியாகநறுக்கிக்கொள்ளவும்.

• மிளகு, சீரகத்தை பொடித்துக் கொள்ளவும்.

• வாணலியில் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரக பொடியை போட்டு தக்காளி, வெங்காயம் மஞ்சளைச் சேர்த்து வதக்கவும்.

• அதனுடன் மிளகாய் வற்றலைக் கிள்ளிப்போட்டு நன்கு வதக்கவும்.

• அடுத்து, முருங்கை இலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து லேசாக வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து உப்பு போட்டு இறக்கவும். இருப்புச் சத்துநிறைந்தது இந்த சூப்.

 

Leave a Reply