பனீர் சைவ பிரியாணி

வேண்டிய பொருட்கள்:

(பாசுமதி) அரிசி – 1 கப்
கெட்டித் தயிர் – 1 கப்
நெய் – 6 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
பிரிஞ்சி இலை – 4
பனீர் – 100 கிராம்
உப்பு – 11/2 டீ ஸ்பூன்
வெங்காயம் – 2
இஞ்சி விழுது – 1/2 டீ ஸ்பூன்
பூண்டு – 4 பற்கள்
தக்காளி – 2
பீன்ஸ் – 8
கேரட் – 1
காலிபிளவர் – 8 சிறிய பூக்கள்
நூல்கோல் – 1

வறுத்து அரைக்க:

கிராம்பு – 2
பட்டை – 1 சிறிய துண்டு
சோம்பு – 1 டீ ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
தேங்காயத் துருவல் – 6 டேபிள் ஸ்பூன்
கசகசா – 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4
பச்சை மிளகாய் – 2

செய்முறை:

* பாசுமதி அரிசியைக் களைந்து 1 கப் தண்­ணீரில் ஊற வைக்கவும்.

* சிறிது நெய்யில் அரைக்க கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்கள் (தேங்காய்த்துருவல் நீங்கலாக) வறுத்து அதனுடன் தேங்காய் துருவல், சிறிது தண்ணீ­ர் சேர்த்து மிக்சியில் போட்டு மசிய அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு குக்கரில் மீதியுள்ள நெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, இஞ்சி, விழுது, பூண்டு, பிரிஞ்சி ஆகியவை அரைத்த விழுதுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

* வதக்கிய கலவை நன்கு நெய்யை விட்டுப் பிரிந்தவுடன் பொடியாக நறுக்கிய காய்கள், காலிபிளவர் பூக்கள், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர் சேர்த்து சிறிது வதக்கவும்.

* தண்­ணீருடன் ஊறிய பாசுமதி அரிசி, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 2 விசில் விட்டு சிம்மில் 5 நிமிடம் வைத்து அணைக்கவும்.

குறிப்பு: பச்சைப் பட்டாணி, குடமிளகாய் போன்ற காய்களையும் கூடுதலாக சேர்த்து பிரியாணியின் ஆரோக்கிய சுவையைக் கூட்டலாம். நெய்க்கு பதிலாக எண்ணையும் பயன்படுத்தலாம்.

Leave a Reply