நாடென் சிக்கன் கிரேவி

தேவையான பொருட்கள்:

சிக்கன் – ½ kg
பெரிய வெங்காயம் – 3.
இஞ்சி, பூண்டு விழுது – 2 tbsp
பச்சை மிளகாய் – 4
மல்லி பொடி – 2 tbsp
கரம் மசாலா – 2 tbsp
மஞ்சள் பொடி – 1 tbsp
சிக்கன் மசாலா – ½ tbsp (விரும்பினால்)
தக்காளி – 1
தேங்காய் பால் – 2 கப்
சோம்பு, சீரகம் – தாளிப்பதற்கேற்ற அளவு
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
கருவேப்பிலை – தாளிக்க…

தயார் செய்யும் முறை:

சிக்கனை  இஞ்சி , பூண்டு விழுது, மல்லி பொடி, கரம் மசாலா, மஞ்சள் பொடி, சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.

அந்த சிக்கன் கலவையை சிறிது தேங்காய் பால் சேர்த்து சிக்கன் மென்மையாகும் வரை சமைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம், வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம், தக்காளி மென்மையாகும் வரை வதக்கி விட்டு சிக்கன் கலவையை சேர்க்கவும்.

நன்றாக கலந்து விட்டு மீதமுள்ள தேங்காய் பால் சேர்த்து சிக்கன் முழுவதுமாக வேகும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

இந்த நாடென் சிக்கன் கிரேவி ஆப்பம் , சப்பாத்தி, சாதத்துடன் பரிமாற நன்றாக இருக்கும்.

Leave a Reply