வாமு ஆகு பஜ்ஜி

என்னென்ன தேவை?

கற்பூரவல்லி இலை – 20
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கற்பூரவல்லி இலைகளை நன்கு கழுவி உலர்த்திக் கொள்ளுங்கள். கடலை மாவில் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், அரிசி மாவைச் சேர்த்து தண்ணீர் விட்டு நடுத்தரப் பதத்தில் பிசைந்து கொள்ளுங்கள். கடாயில் எண்ணெயை ஊற்றி, நன்கு சூடானதும் கற்பூரவல்லி இலைகளை ஒவ்வொன்றாக எடுத்து பிசைந்து வைத்துள்ள மாவில் நன்கு தோய்த்து எண்ணெயில் பொரித் தெடுங்கள். வாமு ஆகு பஜ்ஜி ரெடி.

Leave a Reply