மட்டன் உப்புக்கறி

என்னென்ன தேவை?

மட்டன்-அரை கிலோ
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்-1 கப்
தக்காளி-2 பொடியாக நறுக்கியது.
இஞ்சி, பூண்டு விழுது- அரை கப்
காய்ந்த மிளகாய்-20 (பாதி பாதியாக கிள்ளவும்)
பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை-அரை கப்
எண்ணெய், கறிவேப்பிலை-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
எப்படி செய்வது?

குக்கரில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும். பின்னர் மட்டனை சேர்த்து  வதக்கவும். மட்டனில் தண்ணீர் வற்றும் வரை வதக்கி உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடவும்.  உங்கள் குக்கரில்  எத்தனை விசில் வைத்தால் கறி வேகுமோ அந்த அளவிற்கு வைத்து வேகவிடவும். மட்டன் நன்றாக வெந்ததும் இறக்கி கொத்துமல்லித்தழை தூவி  இறக்கி பரிமாறவும்.

Leave a Reply