பச்சைப் பயறு சாம்பார்

என்னென்ன தேவை?

பச்சைப் பயறு – 1 கப்,
வெங்காயம், தக்காளி – தலா 1,
சாம்பார் தூள் – 1/2 டீஸ்பூன்,
புளிக்கரைசல் – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப,
கடுகு, வெந்தயம், பெருங்காயம் – தாளிப்பதற்கு.
எப்படிச் செய்வது?  

பயறை வேக வைத்து லேசாக மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளிக்கவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி வேக வைத்த பயறு, சாம்பார் தூள், புளிக்கரைசல், உப்புச் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்ததும் இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

Leave a Reply